நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகம் கடும் வறுமையில் இருந்து விடுபட அரசு உதவி உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கடும் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் 100% வெற்றி பெற்றுள்ளன.

இதனை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து இனங்களையும் உள்ளடக்கியது.

குறிப்பாக அது மலாய்க்காரர்கள் மட்டும் உள்ளடக்கியது அல்ல.

கோலாலம்பூரில், பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர்கள் என்றாலும், விகிதாசாரப்படி அதிக இந்திய மக்களின் எண்ணிக்கை உள்ளது.

கோலாலம்பூரில் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திற்கும் கடுமையான வறுமையிலிருந்து விடுபட அரசு உதவி உள்ளது.

இது எங்கள் அணுகுமுறை. ஆனால் சில சமயங்களில் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை சந்தேகிக்கும் சமூகத் தலைவர்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, சீனர்கள், மலாய்க்காரர்கள் அல்லது இந்தியர்கள் என்று பாராமல், ஒவ்வோர் ஏழையையும் ஒற்றுமை அரசு பாதுகாத்துள்ளது.

கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலானில், நாங்கள் பெற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசு  100%  வெற்றி  அடைந்துள்ளது.

கோலாலம்பூரில் நடந்த மலேசியாவின்  சீன வர்த்தகம்,  தொழில் சபையின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset