நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"அன்வார் இப்ராஹிம் சிறை முதல் பிரதமர் வரை" நூல் இளம் அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையூட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

அன்வார் இப்ராஹிம் சிறை முதல் பிரதமர் வரை எனும் நூல் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

எழுத்தாளர் இரா. முத்தரசன் இந்த அன்வார் இப்ராஹிம் சிறை முதல் பிரதமர் வரை எனும் நூலை எழுதியுள்ளார்.

பிரதமரின் கடந்த கால போராட்டங்கள், ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் எவ்வாறு எதிர் கொண்டார்; எந்த முறையில் வெற்றி கண்டார் என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டும் புத்தகமாக இது அமைந்துள்ளது.

மேலும் அரசியலில் தொடர்ந்து போராடினால் வெற்றி காண முடியும் எனும் புதிய நம்பிக்கையை கொடுக்கும் புத்தமாக இது அமைந்துள்ளது.

குறிப்பாக இந்திய சமுதாயம் மிகப் பெரிய நம்பிக்கையில் டத்தோஸ்ரீ அன்வாரை ஆதரித்துள்ளனர் என்ற கருத்தும் இந்த புத்தககத்தில் ஆழமாக உள்ளது.

இது மக்கள் வாசிக்க வேண்டிய புத்தகமாக அமைந்துள்ளது. இவ்வேளையில் நூல் ஆசிரியர் முத்தரசனுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் மஇகாவின் புதிய தலைமையகத்தில் எழுத்தாளர்களுக்கு மண்டபம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ் புத்தகங்களுக்கு என முகப்பிடம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை முத்தரசன் முன்வைத்துள்ளார்.

அவரின் கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இவ்வாறு டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது உரையில் பேசினார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset