நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்குரியவர்கள்:  தலைமையாசிரியர் தியாரன்

சுங்கை:

சாதனைக்குரியவர்களாக மாணவர்களை உருமாற்றுவதற்கும் அடிப்படை தமிழ்ப்பள்ளி தான் என்று  சுங்கை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் தியாரன் நினைவுறுத்தினார்.

நம் வீட்டுப்பிள்ளைகள் தங்களின் ஆரம்பக் கல்வியை தமிழ்ப்பள்ளியில் தொடங்குவதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்ப்பள்ளி என்பது கல்வி கற்கும் இடம் மட்டும் அல்ல. அது நம்மினத்தின் அடையாளம். நமக்கான இம்மண்ணின் வரலாறு.

நாம் நமது பண்பாடு, பாரம்பரியம், கலையோடு மொழி சார்ந்தும் இம்மண்ணில் 200 ஆண்டுகள் கடந்து வாழ்வதற்கு தமிழ்ப்பள்ளி தான் முதன்மை காரணம் என்பதை நம் நிச்சயம் நினைவுக்கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளையில்,தமிழ்ப்பள்ளியில் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கையான இலக்கில் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளை பதிவு செய்த பெற்றோர்களுக்கு நன்றி.

சுங்கை தமிழ்ப்பள்ளியின் மாணவர் தன்னாற்றல் விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் தியாரன் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் சுங்கை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியோடு புறப்பாட நடவடிக்கைகளிலும் தனித்துவமாய் சிறந்த அடைவுநிலைகளை பதிவு செய்து வருவதாகவும் அவர்களின் சாதனை மாவட்ட, மாநிலம், தேசியம் கடந்து அனைத்துலக நிலையிலும் வெற்றிகளும் சாதனைகளும் தொடர்வதாக கூறினார்.

முன்னதாக இவ்விழாவிற்கு சிறப்பு வருகை அளித்த வழக்கறிஞர்  இரா.சங்கரன் இந்நாட்டில் நமது அடையாளமாய் உயர்ந்து நிற்பது தமிழ்ப்பள்ளியும் ஆலயமும் தான் என்றார்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் நம் வீட்டுப்பிள்ளைகளின் எதிர்காலம் தமிழ்ப்பள்ளியில் தான் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset