நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 இந்திய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது

மஞ்சோங்:

சுங்கை செம்பிட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 இந்திய இளைஞர்களை தேடும் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கியது.

பேரா தீயணைப்பு, மீட்புத் துறையின்  உதவி இயக்குநர் சப்ரோட்ஸி நோர் அஹ்மத் இதனை கூறினார்.

மஞ்சோங் செகாரி கம்போங் தஞ்சோங் பத்துக்கு அருகே உள்ள சுங்கை செம்பிட்டிற்கு சென்ற 3 இளைஞர்கள் காணாமல் போனார்கள்.

காணாமல் போனவர்கள் சியூ தர்மராஜ் (வயது 14), ஜி. சரத் (வயது 16), தி. ஈஸ்வரபிள்ளை (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கே9 கண்காணிப்பு நாய்ப் பிரிவினர் இன்று காலை 8 மணிக்கு தேடும் பணிகளை தொடங்கினர்.

மொத்தம் ஐந்து படகுகளை கொண்டு இந்த பணிகள் தொடர்கிறது என்று அவர் கூறினார்.

முன்னதாக சம்பவம் நடந்த இடத்தில் தனது முதற்கட்ட விசாரணையில், பலியான மூவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்ததனர்.

அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் அடித்து சென்றார்.

அவரை காப்பாற்ற முயற்சித்த மற்ற நண்பர்களும் ஆற்றில் அடித்து சென்றுள்ளனர் என்று மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது நோர்டின் அப்துல்லா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset