நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெடிகுண்டு மிரட்டல் குறித்த மின்னஞ்சல் வந்தது உண்மை: எம். குமார்

ஜொகூர் பாரு:

நேற்று பிப்ரவரி 12-ஆம் தேதி காலை வெடிகுண்டு மிரட்டலுடன் மின்னஞ்சல் வந்ததை ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் உறுதிப்படுத்தினார்.

ஜொகூர் காவல்துறைத் தலைவரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும், அதே நபர் தான் புக்கிட் சென்யூமிலுள்ள ஜொகூர் பாரு மாநகராட்சிக்கும் இதே போன்ற மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியதாக நம்பப்படுகின்றது. 

பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அதே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய கணக்கு போலியானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

மின்னஞ்சல் அனுப்புபவரை அடையாளம் காணும் பணியில் தற்போது காவல்துறை ஈடுப்பட்டுள்ளது என்று மாநிலத்திலுள்ள அரசாங்க வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்துச் செய்தியாளர்களிடம் கேட்ட போது அவர் கூறினார்.

தெற்கு ஜொகூர் பாரு பகுதியிலுள்ள மூன்று அரசு வளாகங்களுக்கு திங்களன்று மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெற்கு ஜோகூர் பாரு OCPD உதவி ஆணையர் ரவுப் செலாமாட் முன்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset