நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் விவகாரத்தில் PKR அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தி

கோலாலம்பூர்:

நஜீப் விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையால் கெஅடிலான் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் ரசாக்கின் குறைக்கப்பட்ட தண்டனையை கட்சி கையாள்வதில் அவர்கள் அதிருப்தியை அடைந்துள்ளனர்.

இதனால் உறுப்பினர்கள் எதிர்கால தேர்தல்களை புறக்கணிக்கலாம் என்று தொகுதி தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் தொகுதியின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர், விமர்சனங்களை எதிர்கொண்டு கட்சியை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் பல உறுப்பினர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றார்.

1எம்டிபி விவகாரத்தில் கெஅடிலான் கட்சியினர் குரல் கொடுத்ததுடன், நஜிப்பை சிறையில் அடைக்க வலியுறுத்தினர்.

ஆனால் கட்சித் தலைவர்கள் தண்டனைக் குறைப்பு குறித்து வாய் திறக்காமல் இருப்பது போல் தெரிகிறது.

மேலும், பிரச்சினை குறித்து பேசும் ஒருசில உறுப்பினர்கள்கூட கண்டிக்கப்படுகிறார்கள்.

கட்சியில் உள்ள செயல்பாட்டாளர்களின் கருத்துக்களை தலைமை நிராகரித்தது மட்டுமல்லாமல், கட்சி ஒழுக்கத்தை கடைபிடிக்க கூறியதால் உறுப்பினர்கள் வருத்தமடைந்ததாகவும்  அத் தலைவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset