நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகங்களுக்கான நெறிமுறை கையேடு: இந்த மாதம் வெளியிடப்படும்: ஃபாஹ்மி ஃபாட்சில்

கோலாலம்பூர்:

ஊடகங்களுக்கான நெறிமுறை கையேடு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தகவல், தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

தகவல் இலாகாவுடன் இணைந்து தகவல் தொடர்பு அமைச்சு செய்தி சரிபார்ப்பு உட்பட பல அம்சங்களை வலியுறுத்தும் ஒரு ஊடகங்களுக்கான நெறிமுறை கையேட்டை வெளியிடும்.

தகவல் இலாகாவின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் சில ஒருங்கிணைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டுக்குப் பிறகு, கையேட்டை அறிமுகம் செய்வதற்கான தேதியை அமைச்சு கண்டறியும்.

தகவல் தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஃபாஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset