நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதார வசதிகளை மேம்படுத்த பேராக் மாநிலம் 212.42 மில்லியன் ஒதுக்கீடு: சுகாதார அமைச்சர் 

ஈப்போ: 

இந்த ஆண்டு, மாநிலத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த சுகாதார அமைச்சகத்தின் மேம்பாட்டு செலவினங்களிலிருந்து 212.42 மில்லியனைப் பேராக் மாநிலத்திற்கு ஒதுக்கியுள்ளது.  

இந்த ஒதுக்கீட்டில் 17 புதிய திட்டங்கள், 13 பின்தொடர்தல் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்லி அஹம்மத் தெரிவித்தார்.

பேராக்கில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்ட வளர்ச்சியைச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள 12-ஆவது மலேசியா திட்டத்தின் ரோலிங் திட்டம் 4 இன் கீழ் ஒதுக்கீடுகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவமனையில் நீண்டகால வாகன நிறுத்தம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, 600 இடங்களைக் கொண்ட நான்கு மாடி வாகன நிறுத்துமிடத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் திட்டமிடப்பட்ட நிலையிலுள்ளன என்றார்.

மன்ஜோயில் கட்டப்பட்டு வரும் மலேசியாவின் முதல் ஐந்து மாடி சுகாதார மருத்துவமனை அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் ஜுல்கிப்லி தெரிவித்தார். 

பொது மற்றும் பணியாளர்களின் கழிப்பறைகளை மேம்படுத்த 100,000 வெள்ளி புதிய மருத்துவ உபகரணங்களுக்காக 150,000 சிறப்பு ஒதுக்கீட்டின் ஒப்புதலையும் அவர் அறிவித்தார்.

ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset