நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவக திறப்பு விழாவில் கலந்து கொள்ள கடப்பிதழ் வேண்டும்: மொஹைதின் விண்ணப்பத்திற்கு அரசு தரப்பு எதிர்ப்பு

கோலாலம்பூர்:

தாய்லாந்தின் பேங்காக் செல்வதற்காக தற்காலிகமாக தனது கடப்பிதழை பெற முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் செய்துள்ள விண்ணப்பத்தை அரசு தரப்பு எதிர்த்தது.

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி டான்ஶ்ரீ  மொஹைதின் யாசின் தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

விமான டிக்கெட்டின் அடிப்படையில் அவர் மாலை 4.30 மணிக்கு பேங்காக் புறப்படவுள்ளார்.

இந்நிலையில் மொஹைதினின் விண்ணப்பத்திற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மொஹைதின் முன்வைத்துள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று துணை அரசு வழக்கறிஞர் ஷான்டர் லிம் வேய் கியாங் கூறினார்.

மொஹைதினின் பயணம் நட்பை வலுப்படுத்துவதுடன் ஃபிரிக்கியோ என்ற உணவகத்தின் திறப்பு விழாவிலும் கலந்து கொள்வதாகும்.

ஆகவே விண்ணப்பதாரருக்கு தற்காலிக கடப்பிதழை விடுவிப்பதை நியாயப்படுத்தும் அவசரத் தேவை இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset