நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் புற்றுநோய் பாதிப்புகள் 2040-க்குள் இரட்டிப்பாகும்: சுகாதாரத் துறை அமைச்சர்

புத்ராஜெயா:

நாட்டில் நிகழும் மரணச் சம்பவங்களில் புற்று நோய் நான்காவது இடத்தில் உள்ளதை மலேசிய புள்ளிவிபரத் துறையின் 2023-ஆம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டில் 10.5 விழுக்காடாக இருந்த புற்றுநோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 12.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் புற்றுநோய் முதன்மையானதாகவும் (26.44 விழுக்காடு) அரசாங்க மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களில் நான்காவதாகவும் (9.29 விழுக்காடு) உள்ளதை 2023-ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தரவு அறிக்கை காட்டுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அஹம்மத் தெரிவித்துள்ளார்.

மேலும், புற்றுநோய் தொடர்பான மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு அந்நோயின் தாக்கம் தாமதமாகக் கண்டு பிடிக்கப்படுவதும் ஒரு காரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். 

பதிவு செய்யப்பட்ட புற்று நோய் சம்பவங்களில் 60 விழுக்காடு மூன்றாம் அல்லது நான்காம் கட்டத்தில் அடையாளம் காணப்பட்டவையாகும் என்றார் அவர்.

கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் புதிதாக 168,822 புற்று நோய்ச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டது மலேசியப் புற்றுநோய் பதிவகத் தரவுகள் மூலம் தெரிவிக்கின்றது. 

மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், லிம்போமா எனப்படும் வெள்ளை இரத்தஅணு புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவை அதிகமாகப் பதிவாகும் புற்றுநோய்களாக விளங்குகின்றன என்று இன்று அனுசரிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஓர் அறிக்கை ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக உணவு முறையின் வாயிலாக ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடும் வேளையில் மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கும்படியும் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset