நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவுத் துறை கடந்தாண்டு 5.5 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான வருவாயைப் பெற்றுள்ளது

பெட்டாலிங் ஜெயா:

கடந்த 2023-ஆம் ஆண்டு மொத்தம் 5.56 பில்லியன் வெள்ளியைக் குடிநுழைவு துறை பெற்றுள்ளது. 

குறிப்பாக, இதில் அந்நியத் தொழிலாளர்களின் கட்டணங்கள் மட்டும் 3 பில்லியனும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022-ஆம் ஆண்டு குடிநுழைவு துறையின் வருவாய் 5.13 பில்லியன் வெள்ளியாக இருந்த நிலையில் கடந்தாண்டு 5.56 பில்லியன் வெள்ளி கூடுதல் வருவாய் கிடைக்கப் பெற்றதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். 

கடந்த ஆண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அந்நியத் தொழிலாளர்களின் நாட்டிற்கு 3.31 பில்லியன் வெள்ளிக்கு மேல் வரி செலுத்தியுள்ளனர். 

கூடுதலாக, குடிநுழைவு துறையின் சேவை செயல்முறைகளின் வருவாய் 654.6 மில்லியனாக இருந்தது.

கடப்பிதழ் புதுப்பித்தல் மூலம் 522.1 மில்லியன் வருவாயைக் குடிநுழைவு பதிவு செய்தது

மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கான பணி அனுமதிகளிலிருந்து மொத்தம் 379.9 மில்லியனும் விசா வழங்கும் சேவையிலிருந்து 228.5 மில்லியனும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

2025 ஆம் ஆண்டிற்குள் 2.4 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் தற்போது குறிப்பிட்ட நடவடிக்கைகளை வகுத்து வருவதாகவும், உள்துறை மற்றும் மனித வள அமைச்சகங்களுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களுடன் ருஸ்லின் கூறினார்.

குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஒன்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஆவணங்களைச் செயலாக்க எடுக்கும் நேரத்தைக் குறைப்பதை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில், ஆரம்பம் முதல் தற்காலிக பணிக்கான வருகை அனுமதிச் சீட்டு வழங்கும் வரை 29 மாதங்கள் மற்றும் 13 நாட்கள் ஆகும். அது உண்மையில் நீண்ட காலமாக இருந்தது.

எனவே, அதை 15 மாதங்கள் மற்றும் ஏழு நாட்களாகக் குறைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது அசல் காலத்தை விட 46% குறைப்பு என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset