நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன, இந்திய சுற்றுப் பயணிகளின் வருகை: கண்காணிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கான சீன, இந்திய சுற்றுப் பயணிகளின் வருகையை கண்காணிக்கப்பட விரிவான வழிமுறைகள் இருக்க வேண்டும்.

அரசியல் ஆய்வாளர் ஷாஹிர் அட்னான் இதனை வலியுறுத்தினார்.

சீன, இந்திய சுற்றுப் பயணிகளுக்கு 30 நாட்களுக்காக விசா விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.

இதனால் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் அதிகரிப்பதற்கான முயற்சியில் சுற்றுலா அமைச்சு தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது.

இந்த ஆண்டு அந்த நாட்டிலிருந்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இலக்கை அடைய அது இலக்கு  கொண்டுள்ளது.

இதே போன்று இந்தியாவில் இருந்தும் அதிகமான சுற்றுப் பயணிகளை மலேசியாவுக்கு வருகின்றனர்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இது நிச்சயமாக நாட்டிற்கு வருமானத்தை வழங்குகிறது. 

ஆனால் சட்டவிரோதமாக வேலை செய்ய விசா விலக்குகளை தவறாகப் பயன்படுத்தும் ஒரு தரப்பினர் இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒரு விரிவான வழிமுறையை அரசாங்கம் ஆராய வேண்டும்.

குறிப்பாக மிகவும் பயனுள்ள கண்காணிப்பு தேவை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset