நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலைக் கையாளும் விவகாரத்தில் ஒற்றுமை அரசாங்கம் நிலையாக இல்லையா? பிரதமர் அன்வார் மறுப்பு 

புத்ராஜெயா: 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை குறைப்பதற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் முடிவில் ஒற்றுமை அரசாங்கம் உறுதியாக இல்லை என்று கூற்றைப் பிரதமர் அன்வார் மறுத்துள்ளார். 

ஊழல் விவகாரங்களைக் கையால்வதில் ஒற்றுமை அரசாங்கம் மெத்தனமாக இருப்பதாகக் கூறப்படும் கூற்றானது பொய் என்றும் அன்வார் குறிப்பிட்டார். 

நஜிப்பின் மன்னிப்பு குறித்து அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹம்மத்  ஜாஹிட் ஹமிடி தனக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை எப்பொழுதும் கொடுத்ததில்லை என்றும் கூறினார்.

ஊழல் மட்டுமல்லாமல் பொருளாதார விவகாரங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்வது போன்ற பல முன்னுரிமைகள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு இருப்பதாக அன்வார் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset