நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இசை நிகழ்ச்சிகளை விட முக்கியமான சிக்கல்கள் உள்ளன: முர்ஷிடுல் அம் ஹாஷிம் ஜாசின் 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் இசைநிகழ்ச்சிகளை நடத்தப்படுவதைக் காட்டிலும் தீர்க்க வேண்டிய சிக்கல்கல் நிறைய இருப்பதாக முர்ஷிடுல் அம் ஹாஷிம் ஜாசின் ஹெரிவித்துள்ளார்.

தனது தரப்பால் பல்வேறு விஷயங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்தவோ அல்லது தீர்க்கவோ முடியாது என்றும், தற்போது 1990-ஆம் ஆண்டில் கிளந்தானைப் பாஸ் கட்சி ஆட்சி செய்தப் போது இருந்த நிலைதான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பாஸ் கட்சி சிக்கல்களைத் தீர்த்து மக்களுக்காக 100 முன்முயற்சிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தியது. 

இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆட்சியில் இருக்கும் போது முக்கியமான பிரச்சனைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறினார். 

நேற்று, முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின், முஹைதின் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தவில்லை என்றார்.

மேலும், அக்காலக்கட்டத்தில் பாஸ் கட்சியின் உதவி தலைவர் இட்ரிஸ் அஹமத் இசை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மட்டுமே கேட்டுக் கொண்டார் என்றும் கைரி தெரிவித்தார். 

பிப்ரவரி 24-ஆம் தேதி தேசிய அரங்கில் அனைத்துலகப் பாடகரான  எட் ஷீரனின் இசை நிகழ்ச்சிக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நோன்பு மாதமே காரணம் என்றார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset