நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடி-முஹைதின் இடையேயான உறவு மிக நெருக்கமானது: துவான் இப்ராஹிம்

பெட்டாலிங் ஜெயா:

ஹாடி அவாங் , முஹைதின் இடையேயான மிக நெருக்கமானது என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

நேற்று ஹாடி அவாங், முஹைதின் யாசின் இடையே பனிப்போர் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள வதந்திகளை துவான் இப்ராஹிம் மறுத்துள்ளார். 

தேசியக் கூட்டணியின் தலைவராக இருக்கும் முஹைதினை இருப்பாரா அல்லது பாஸ் கட்சியின் உதவி தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரை பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுமா என்ற எந்தக் கேள்விகளும் இதுவரை எழவில்லை என்றார். 

முஹைதினுக்கும் ஹாடிக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் தற்போது நடந்து முடிந்த கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் எந்தவொரு மனக்கசப்புகள் ஏற்பட்டிருப்பது போல் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்க்காலத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி குறித்துத் தேசியக் கூட்டணியுடன் இணைந்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset