நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது மாநாடும் 1 பில்லியன் ஸலவாத் நிறைவும் 

கோலாலம்பூர்:

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது மாநாடு பிப்ரவரி 3ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் மார்க்க உரையாற்ற இருக்கிறார்கள் என்று இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி மௌலானா ஹிக்மத் அலி தெரிவித்தார். 

நபிகள் நாயகம் புகழ் பாடும் இந்த மாநாட்டில் 1 பில்லியன் ஸலவாத் ஓத இலக்கு வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

மஸ்ஜித் இந்தியா பள்ளியின் மேலாளர் மௌலவி அல்ஹாஃபிஸ் நஸ்ருல் ஹக் மதனி அவர்களின் இறைவசன ஓதுதலுடன் துவங்கும் இந்த நிகழ்ச்சியில் மஸ்ஜித் இந்தியாவின் இமாம் காயல் மௌலவி அல்ஹாஃபிஸ் செய்யது இப்ராஹிம் அல் புகாரி எம். ஏ அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது இறை புகழ் உரை நிகழ்த்த இருக்கிறார்கள். 

துவக்க உரையை பினாங்கு தாவூதியா கல்வி நிலைய நிறுவனரும் முதல்வருமான மௌலவி முஹம்மது ஹபீப் மன்பஈ நிகழ்த்துகிறார்,

மஸ்ஜித் இந்தியாவின் முன்னாள் இமாம் மௌலவி அல்ஹாஃபிஸ் எஸ் எஸ் அஹ்மது பாகவி வாழ்த்துரை வழங்க, ஆலிம் கவிஞர் தேங்கய் ஷரபுத்தீன் மிஸ்பாஹி, ஓ எம் அப்துல் காதிர் பாகவி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். 

பெண்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளலாம் என்று மௌலானா ஹிக்மத் அலி கூறினார்.

இந்த நல்வாய்ப்பை மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொண்டு சங்கைமிகு இறை பிரார்த்தனையில் கலந்துகொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset