நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பிற்கு அரச மன்னிப்பு; அன்வாரின் வாக்குறுதி என்னவானது: முக்ரிஸ்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படும் என்ற பேச்சுகள் பரவலாக பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஊழலை எதிர்த்து போராடும் பிரதமரின் வாக்குறுதி என்னவானது என்று பெஜூவாங் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

நஜிப் ரசாக்கின் சிறைத் தண்டனையை குறைக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்த சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இது மில்லியன் கணக்கான மக்களை ஏமாற்றமடையச் செய்ததாக முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

அவரது அணுகுமுறையை அன்வாருக்கு விரோதம் என்று விமர்சித்த முக்ரிஸ், 

முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் நலன்களால் மட்டுமே உந்தப்பட்டவை என்று கூறினார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவேன் என்று அன்வாரின் வாக்குறுதி எங்கே போனது? ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற தலைவர்களை விடுவிக்கும் அதே வேளையில், அவருக்கு எதிரிகளாகக் கருதப்படும் பழைய அரசியல் தலைவர்கள் மீது புதிய விசாரணையைத் தொடங்குவதுதானா?

இது பாசாங்குத்தனம் என்று முக்ரிஸ் மகாதீர் முகமது கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset