நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி அமைச்சரின் தரத்திற்கு ஃபாட்லினா செயல்படவில்லை: கைரி

கோலாலம்பூர்:

கல்வியமைச்சராக இருப்பதற்கு ஃபாட்லினாவுக்கு தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

ஃபாட்லினா சிடேக் இன்னும் சிறந்த கல்வி அமைச்சரின் தரத்திற்குச் செயல்படவில்லை.

முதல் ஆண்டில் எந்த குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் அவர் காணவில்லை.

அவர் பெரிதாக பிரச்சினை தரும் தவறுகளையும் செய்ததாக நான் கூறவில்லை.

ஆனால் நாட்டின் கல்வி முறைக்கான தெளிவான பார்வையை வெளிப்படுத்த  அவர் தவறி விட்டார்.

கல்வி முறை தொடர்பான பல கவலைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் கல்வியமைச்சின் குறைபாடுகளுக்கு தீர்வு இல்லை.

கெலுவார் செகஜாப் நிகழ்வில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் அமைச்சராக யார் இருப்பார் என்று பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு கைரி மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset