நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் தண்ணீர் கட்டணம் இரு மடங்கு உயர்வு 

ஜார்ஜ் டவுன்: 

பினாங்கில் தண்ணீர் கட்டணம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இரு மடங்காக உயரும் என்று அம்மாநில முதல்வர் சாவ் கோன்  இயோவ் தெரிவித்துள்ளார். 

மாதத்திற்கு 20 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, முந்தைய விகிதமான 22 காசுகளுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு மீட்டருக்கு 50 காசுகள் வசூலிக்கப்படும்.

இதற்கிடையில், மாதத்திற்கு 20 முதல் 35 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு கன மீட்டருக்கு RM1.10 வசூலிக்கப்படும். 

அதே சமயம், 35 கன மீட்டருக்கும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களிடம்ஒரு கன மீட்டருக்கு RM 2 வசூலிக்கப்படும்.

எவ்வாறாயினும், ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் எட்டு நபர்களை உள்ளடக்கிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இக்கட்டணத்தில்  தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சோவ் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset