நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு: டான்ஸ்ரீநடராஜா

கோலாலம்பூர்:

பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துக் கொள்ள வருமாறு பிரதமருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தரப்பில் இருந்து பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பத்துமலையில் 133ஆவது தைப்பூச விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

வரும் ஜனவரி 23ஆம் தேதி வெள்ளி ரத ஊர்வலத்துடன் பத்துமலை தைப்பூச விழா தொடங்கவுள்ளது.

இருந்தாலும் பக்தர்கள் தற்போது முன்கூட்டியே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இவ்விழாவில் கலந்து கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்.

பிரதமரை தவிர்த்து மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, அமைச்சர்கள், துணையமைச்சர்கள் உட்பட பல பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

இதனிடையே பத்துமலையின் மேல் குகைக்கு செல்ல மின் மடிக்கட்டு நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த வரைப்படம் உட்பட அனைத்து ஆவணங்களும் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பத்துமலைக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக்கிடம் இது குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இது குறித்து அறிவிப்புகளை செய்வார் என தேவஸ்தானம் நம்புகிறது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset