நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையத்தில் சமையல் எண்ணெய் விற்பனை மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

பெட்டாலிங் ஜெயா: 

சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் 1 கிலோ பிளாஸ்டிக் பையிலுள்ள சமையல் எண்ணெயை இணையத்தில் விற்பனை செய்யும் மோசடி குறித்துப் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவீன அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் அல்லது மற்ற இணையத்தளங்களின் மூலம் பிளாஸ்டிக் பையிலுள்ள சமையல் எண்ணெயை வாங்கியவர்கள் இந்த விற்பனையில் மோசடி நடந்திருப்பதாக உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவீன அமைச்சிடம் புகார் செய்துள்ளதாகத் அவ்வமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

சமூக ஊடகங்கள் அல்லது மற்ற இணையத்தளங்களில் பிளாஸ்டிக் பையிலுள்ள சமையல் எண்ணெயை சலுகை விலையான RM2.50 ஐ விட குறைவாக விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் அதனைக் கையாள நடவடிக்கைகளை எடுக்கவும் தனது அமலாக்கப் பிரிவின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவை அமைத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலிவான சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வழங்கும் விளம்பரங்கள் மோசடிகளாக இருக்கலாம் என்பதால் நுகர்வோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மானிய விலையில் விற்கப்படும் பொருட்களை வைத்து மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவீன அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset