நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; மூவர் கைது

ஜொகூர் பாரு: 

1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த விசாரணையில் காவல்துறையினர் மூவரைக் கைது செய்துள்ளனர். 

ஜொகூர் பாரு மற்றும் இஸ்கந்தார் புத்ரி பகுதிகளில் ஜனவரி 10 -ஆம் தேதி புதன்கிழமை, ஜனவரி 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையிடையே மூன்று வெவ்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. 

அச்சோதனை நடவடிக்கையின் போது, 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குப் பின்னனியாக இருந்தவர் 40 வயதுடைய ஆடவர் என நம்பப்படுகிறது. மேலும், இன்னும் இருவர் அவருடைய தாய் மற்றும் நண்பர் ஆவார். 

சந்தேக நபரின் குற்றப் பதிவில் மொத்தம் 46 வழக்குகள் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பானவை. 

மேலும் ஆறு வழக்குகளில் தேடப்படும் நபராகவுள்ளார் என்று அவர் கூறினார்.

ஜொகூர் காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கமாருல் ஜமான் மாமத் இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் விநியோகிக்கும் மோசடி கும்பல் கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது.

சோதனைகளைத் தொடர்ந்து, RM1.2 மில்லியன் மதிப்புள்ள 16.47 கிலோ எக்ஸ்டசி பவுடர்கள், RM24,000 மதிப்புள்ள 7.77 கிலோ கஞ்சா, RM354 மதிப்புள்ள 1.77 கிராம் சியாபு மற்றும் RM16 மதிப்புள்ள எரிமின் 5 மாத்திரைகள் 0.59 கிராம் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B மற்றும் ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 8(a) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் 40 மற்றும் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், வியாழக்கிழமை (ஜனவரி 11) முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset