நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்கா துபாய் செகுபாத், பாப்பாகாமோ விசாரணைக்கு அழைக்கப்படுவர்: ஐஜிபி

கோலாலம்பூர்:

லங்கா துபாய் விவகாரம் தொடர்பில் செகுபாத், பாப்பாகாமோ ஆகியோர் விசாரணைக்கு அழைப்படுவார்கள்.

தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் துபாயில் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் தான் லங்கா துபாய் நகர்வு.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை  குறித்து  வீடியோ பதிவுகள் பரப்பப்பட்டது.

இது குறித்து நாடு முழுவதும் 43 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இப் புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதன்மை சந்தேக நபராக ராஜா பெட்ரா கமாருடின் விளங்குகிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் 10 நாட்களுக்குள் ஆட்சி கவிழ்க்கப்படும் என பேசியுள்ளார்.

ராஜா பெட்ரா வெளிநாட்டில் இருப்பதால் அவரை உடனடியாக விசாரிக்க முடியாது.

அவருக்கு பதிலாக செகுபாத், பாப்பாகாமோ ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று ஐஜிபி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset