நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெய்ன் ராயன் வழக்கின் விசாரணை 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளது: டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்

கோலாலம்பூர் :

ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் ஜெய்ன் ராயன் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாகிய நிலையில், தேசியக் காவல்துறை தற்போது சோதனை நடவடிக்கையில் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகள் மீது விசாரணையை மையப்படுத்தியுள்ளது.

இதுவரை, தடயவியல், நோயியல், சாட்சி அறிக்கைகள் மற்றும் சம்பவ இடத்தில் விசாரணை ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய காவல்துற விசாரணை 90 விழுக்காட்டை எட்டியுள்ளது.

சமீபத்திய தடயவியல் விசாரணையின் முடிவுகள் எதிர்மறையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தேசிய காவல்துறையின் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

ஆதாரங்களின் அடிப்படையில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பவத்துடன் ஒத்துப்போவதாக நினைக்கும் சந்தேக நபரையும் கைது செய்வோம் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் கொலைக்கான காரணத்திற்கான தடயங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், இந்த வழக்கில் தனது தரப்பு ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டதாக அவர் விளக்கினார்.

இஃது அடுத்தடுத்த விசாரணையைத் தொடர முக்கியமானது.

இதற்குப் பிறகு, வழக்கு நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் நெருங்கிய நபர்கள், பிற சாட்சிகளை விசாரணைக்கு உதவுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, கடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ராயனின் சடலம் மறுநாள் இரவு 10 மணியளவில் டாமான்சரா டாமாய், இடாமானில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset