நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவை கைப்பற்ற ஜசெக, கெஅடிலான் இடையே போட்டா போட்டி

கோலாலம்பூர்:

மித்ராவை கைப்பற்ற ஜசெக, கெஅடிலான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டா போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ரா தற்போது தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட்டது.

தற்போது இந்த மித்ராவுக்கு தலைமையேற்கப் போவது யார் என்ற பேச்சுதான் பரவலாக எழுந்துள்ளது.

சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் பொறுப்பு வகித்த மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு கலைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை குழு தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஜசெக கருதுகிறது. ஆனால் கெஅடிலான் கட்சி அதன் பொறுப்புகளை கேட்கிறது.

அதே வேளையில் இக் குழு கலைக்கப்பட்டால் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி அதற்கு பொறுப்பேற்பார். இதனால் மித்ரா முழுமையாக கெஅடிலான் கட்சியின் வசமாகிவிடும்.

மேலும் பேராசிரியர் ராமசாமி விலகியதை தொடர்ந்து ஜசெகவில் இந்தியர்கள் சற்று பலவீனமாக உள்ளனர்.

இதனால் மித்ரா பொறுப்பின் வாயிலாக மீண்டும் வலுப்பெற அக் கட்சியில் உள்ளவர்கள் சிந்தித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மித்ராவிற்கு பொறுப்பேற்க இரு கட்சிகளுக்கு இடையே பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset