நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரை வீழ்த்தும் திட்டம் முட்டாள்தனமானது: ஷாரில் ஹம்டான்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை வீழ்த்தும் திட்டம் முட்டாள்தனமானது என்று அம்னோ முன்னாள தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான் கூறினார்.

சமீபத்தில் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கில் லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதிகளை இருதரப்பும் தொடர்புடையதாக வைத்திருக்கும் அரசியல் தந்திரமாக இது அமைந்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பது முட்டாளதனமானது.

ஒற்றுமை அரசாங்கத்தை 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள். இதில் பெர்சத்து கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

அதே வேளையில் அன்வாரை வீழ்த்த வேண்டும் என்றால் அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 112க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அது சாத்தியம் இல்லை.

ஆகவே இதுபோன்ற முயற்சிகளை ரசிக்க மட்டுமே முடியும். மற்றப்படி ஒன்றும் இல்லை என்று கைரி ஜமாலுதீன் நடத்தும் KJ KELUAR SEKEJAP நிகழ்ச்சியின் நேர்காணலில் ஷாரில் ஹம்டான் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset