நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஜொகூர் பாரு : 

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  2,275 குடும்பங்களைச் சேர்ந்த 8,221 பேர் 53 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு 9 மணியளவில் 2,201 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 7,965 பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடும்போது இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோத்தா திங்கி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு, 4730 பேர் 26 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து ஜொகூர் பாரு 12 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 1,976 பேர் தங்கியுள்ளனர். 

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை எந்தவிதஉயிர் சேதமோ ஏற்படவில்லை என்று ஜொகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அஸ்மி இவ்வாறு தெரிவித்தார். 

இதற்கிடையில், வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதே நேரத்தில் மாநிலத்தில் மூன்று ஆறுகள் ஆபத்தான நீர் நிலைகளை எட்டியுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset