நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க தொடர்புடைய நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி எம்.ஏ.சி.சியால் கைது 

கோலாலம்பூர்: 

போக்குவரத்து வேலைக்காக தமது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றத்தின் பேரில் அரசாங்க தொடர்புடைய நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியை சிலாங்கூர் எம்.ஏ.சி.சி கைது செய்துள்ளது. 

தமது கணவரின் நிறுவனத்தைப் பயன்படுத்தி 40 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக எம்.ஏ.சி.சி வட்டாரம் ஒன்று தெரிவித்தது. 

இந்நிலையில், குற்றம் புரிந்த அம்மாது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நேற்று மதியம் 2 மணிவாக்கில் விளக்கம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார். இன்று அவர் ஷா ஆலாம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2022ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட நபர் ஒரு துணை குத்தகைதாரரை நியமித்ததில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 280,000 ரிங்கிட் ஊழல் புரிந்துள்ளார். 

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி தலைமை இயக்குநர் டத்தோ அலியாஸ் சலிம் உறுதிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset