நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீர் விநியோக தடையால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பயிலலாம்

ஜார்ஜ்டவுன்:

நீர் விநியோக தடையால் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயிலலாம்.

பினாங்கு கல்வி இலாகாவின் துணை இயக்குநர் வான் சாஜிரி வான் ஹசான் அறிவித்தார்.

வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பினாங்கில் மாநிலத்தில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படவுள்ளது.

இந்த நீர் விநியோக தடையால் கிட்டத்தட்ட 590,000 பேர் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அம்மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம்.

அதே வேளையில் தேர்வு எழுதவிருக்கும் எஸ்பிஎம் மாணவர்கள், கல்லுரி, பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்லலாம்.

இதற்கான அனுமதியை கல்வியமைச்சிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset