நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தாபாருவில் அதிரடி சோதனை: 238 அந்நிய நாட்டினர் கைது

கோத்தாபாரு:

கோத்தாபாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 238 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கிளந்தான் குடிநுழைவு துறையின் நிர்வாக பிரிவு துணை இயக்குநர் நிக் அக்தாருல்ஹாக் கூறினார்.

நாட்டில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை துடை தொழிக்கும் நோக்கில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோத்தாபாரு சுற்று வட்டாரத்தில் இன்று காலை சோதனைகள் நடத்தப்பட்டது.

போலீஸ்படை, கோத்தாபாரு மாநகர் மன்றம். தேசிய பதிவிலாகா ஆகியவற்றுடன் இணைந்து குடிநுழைவு இலாகா இந்த சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனையில் கிட்டத்தட்ட 234 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைதானவர்களில் பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, நேப்பாளம், இந்தோனேசியா மியன்மார், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset