நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்ப் ஹோட்டலுக்கு நஜீப் நிர்வாகம் 1.15 மில்லியன் ரிங்கிட் செலுத்தியுள்ளது

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் நிர்வாகம் டிரம்ப் அனைத்துலக ஹோட்டலுக்கு 1.15 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு இடையில் இந்த தொகை செலுத்தப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வை குழு கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற புலனாய்வாளர்களாள் மஸார்ஸ் அமெரிக்க நிறுவனம் மூலம் ஆவணங்கள் வழங்கப்பட்டது.

இதனைக் கொண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வை குழு 156 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளது.

கடந்த 2017 செப்டம்பரில் வெள்ளை மாளிகைக்கு அதிகாரப்பூர்வ பயணம்  மேற்கொண்ட நஜீப்பிற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்தளித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்  நஜீப்பும் அவருடன் வந்தவர்களும் வாஷிங்டனில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் ஒரு சில அதிகாரிகள் திரும்பி வந்து அதே மாதத்தில் விடுதியில் தொடர்ந்து தங்கியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக நஜீப் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிபர் அறையில் தங்கியுள்ளார். அவருக்கு மட்டும் மூன்று இரவுகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த கட்டணம் 44,562 அமெரிக்க டாலராகும்.

இந்த விவகாரம் தொடர்பில்  அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை ஏறக்குறைய ஏழு ஆண்டுகால விசாரணையின் அடிப்படையில் அமைந்ததாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset