நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங் கம்போங் பூங்கா ராயா மக்களுக்கு  சிலாங்கூர் கூ வீடுகள்: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சுபாங் கம்போங் பூங்கா ராயா மக்களுக்கு சிலாங்கூர் கூ (Rumah Selangor Ku) வீடுகள் வழங்கப்படும் என்று சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

சுபாங் கம்போங் பூங்கா ராயாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த அடிப்படையில் இவ்வீடுகள் மேம்பாட்டு நிறுவனத்தால் உடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் சிலாங்கூர் மாநில தலைமையகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் பெர்சத்து கட்சியின் சயாப் பிரிவைச் சேர்ந்த மௌர்னா  தலைமையில் அப்பகுதி குடியிருப்பாளர்கள் சங்கத்தினர் பாப்பாராயுடுவை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாப்பாராயுடு,

இக்குடியிருப்பு பகுதியின் கடந்த கால பிரச்சினைகளு குறித்து நான் பேசவில்லை.

அதே வேளையில் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் தாராளமாக என் அலுவலகத்திற்கு வரலாம்.

கட்டடத்திற்கு வெளியே ஆர்பாட்டம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறேன்.

அப் பகுதியில் வசிக்கும் 33 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர்களுக்கு தற்காலிகமாக வீடுகள் வாடகைக்கு தேடித் தரப்படும்.

சிலாங்கூர் மாநில அரசின் வாடகை வீடு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதன் பின் சிலாங்கூர் கூ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடுகள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இம்முயற்சிக்கு குடியிருப்பாளர்களும் சம்மமதம் தெரிவித்துள்ளனர் என்று பாப்பாராயுடு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset