நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஏர் ஏசியா சபா, சரவாக்கிற்கு நிலையான டிக்கெட் விலைகளை வழங்குகிறது

சிப்பாங் : 

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சபா, சரவாக் செல்லும் பயணிகளுக்கு ஏர் ஏசியா நிலையான டிக்கெட் விலைகளை வழங்கவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார். 

கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், சீபு, பிந்துலு, மிரி வரை செல்வதற்கும் ஜொகூர் பாருவிலிருந்து கூச்சிங், சீபு, பிந்துலு, மிரி வரை செல்வதற்கும் ஒரு வழி டிக்கெட் விலை 298 வெள்ளியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கூடுதலாக, கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினாபாலு, சண்டாகான், தாவவ் செல்வதற்கும் ஜொகூர் பாருவிலிருந்து கோத்தா கினாபாலு, சண்டாகான், தாவவ் செல்வதற்கும் ஒரு வழி டிக்கெட் விலை 348 வெள்ளியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையான டிக்கிட் விலை அனைத்து முக்கிய விமான நிலையங்களையும் உள்ளடக்கியது. 

பொது மக்கள் இப்போதே விமானப் பயணங்களை முன்பதிவு செய்யத் தொடங்கலாம் என்றும் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அந்தோனி லோக் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset