நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் விலங்குகளை ஏன் கண்டுகொள்வதில்லை?: பி ப ச தலைவர் மொஹைதீன் அப்துல் காதர் கேள்வி

பினாங்கு: 

வெள்ளம் பரவலான அழிவை ஏற்படுத்துகிறது என்பதில் யவருக்கும் சந்தேகமில்லை. இதன் விளைவாக கால்நடைகள், விவசாய பயிர்கள், சொத்துக்களுக்கு கடும் சேதம் ஏற்படுகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

சமீபத்திய பல சம்பவங்களில் உலகம் முழுவதும் ஏற்கனவே நடக்கும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந் நிலைமை மோசமாகிவிட்டது என்றார் அவர். 

இதில் அதிகம் மறக்கப்பட்ட ஒரு பிரிவு கால்நடைகள். மலேசியாவில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. கிளந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து இதோ இப்போது ஜொகூரிலும் நிலைமை மோசமாக உள்ளது,

வெள்ளம் ஏற்பட்டால், பண்ணை நிலம் அதிகம் பாதிக்கப்படுகிறது.
விலங்குகளைப் பாதுகாக்கவோ அல்லது அவற்றை எளிதாக வெளியேற்றவோ எந்தவிதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என முகைதீன் வேதனையோடு சுட்டிக்காட்டினார். 

இயற்கை பேரழிவுகளில் குறிப்பாக வெள்ளம், வானிலை தொடர்பான இயற்கை பேரழிவுகளில் கால்நடைகளின்  உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பேரிடர் மேலாண்மையில் விலங்குகளுக்கு மிகக் குறைவான முன்னுரிமை இருப்பதால், கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் விவசாயிகள், பேரிடர் ஏற்படும் போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் கால்நடைத் துறைக்கு 36.9 மில்லியன் ரிங்கிட் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

பேரழிவிற்கு முன்னும் பின்னும் இந்த விலங்குகளுக்கு உதவவும் பாதுகாக்கவும் சிறந்த முடிவுகளை எடுக்க ஆரோக்கியமான திட்டமிடல் அவசியம் தேவைப்படுகிறது.

வெள்ளத்தில் சிக்கிய விலங்குகள் அடிக்கடி மன அழுத்தம், அதிர்ச்சி, மூட்டு சேதம், இரத்த இழப்பு, நீரிழப்பு, இறுதியில் நீரில் மூழ்கி மரணம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன.

இழப்புகளின் அளவு மற்றும்  வளர்ப்பவர்களுக்கு கால்நடைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பண்ணை விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

விவசாய அமைச்சும் கால்நடை மருத்துவ சேவைகள் இலாகாவும் இந்த அபாயங்களைக் குறைப்பதற்கும், விலங்குகள் மீதான பேரழிவுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் கொள்கைகள் வகுக்க வேண்டும்.

பேரழிவுகளின் போது விலங்குகள் பாதிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை மனிதர்களை மிகவும் சார்ந்துள்ளது. எனவே, வீட்டு விலங்குகள், கால்நடைகளை அவசர திட்டங்களில் இணைத்துகொள்ளுமாறு விவசாய அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுகொள்வதாக முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset