நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்: எதிர்கட்சிகளுக்கு அஹ்மத் ஸாஹிட் அறிவுறுத்து 

கோலாலம்பூர்: 

அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்கட்சி தரப்பு கொண்டு வரும் எந்தவொரு நகர்வுகளும் எடுபடாது. மக்களின் நேரத்தை தான் அது வீணடிக்க செய்யும் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார். 

14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாட்டில் மூன்று பிரதமர்கள் மாறியுள்ளனர்; அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்கட்சி தரப்பு ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்ள வேண்டும். கடந்த ஐந்தாண்டில் மூன்று பிரதமர்களால் நாட்டில் அரசியல் சூழல் நிலையான இல்லை என்று புறநகர்,வட்டார அமைச்சின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

முன்னதாக, அரசாங்கத்தைக் கவிழ்க்க துபாய் நகர்வு சதித்திட்டம் நடைபெற்றது உண்மைதான் என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சனூசி மாட் நோர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset