நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருப்புகழ் சபா நிறுவ உதவிகள் நல்கப்படும்: துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

ஈப்போ: 

தமிழ்மொழி இவ்வுலகில் சிறந்து விளங்குவதற்கு உன்னத காரணம் பக்தி இலக்கியம் என்றால் மிகையாகாது என்று மலேசிய ஒற்றுமைத்துறை துணை யமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

ஒரு காவியத்திற்கு கம்பராமாயணம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்று அறிகிறோம். அதுபோலவே, சங்கத்தமிழ் வளர்ச்சிக்கு அருணகிரிநாதர் பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. அத்தகைய மாமனிதனிதருக்கு விழா எடுப்பது பெருமைக்குரிய விசயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு முழு ஆதரவும் உதவிகளும் செய்து தரப்படும். ஈப்போ அருணகிரிநாதர் மன்றம் டாக்டர் வ.ஜெயபாலன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. இவர்களின் இத்தகைய ஆன்மீக தமிழ்மொழி பணி என்றென்றும் சிறப்பாக தொடர வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்.

இந்நாட்டு இந்தியர்களின் உருமாற்றுத் திட்டத்திற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். தற்போது புதிய அமைச்சில் சேவையாற்றி வருகிறேன். இத் துறையின் வாயிலாக அனுதினமும் அதிகமான எண்ணிக்கையில் பல இன மக்களை என்னை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கூறுகின்றனர். அவற்றை கேட்டறிந்து தீர்வு காண முயற்சித்து வருகின்றேன். என் தந்தையார் பினாங்கு தண்ணீர்மலை முருகன் ஆலயத்திற்கு சேவையாற்றியவர். அவரை தொடர்ந்து தற்போது நான் மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிட்டியதற்கு இறைவனுக்கு நன்றி என்று அவர் கூறினார்.

இங்கு நடைபெற்று வரும் அமுதம் வகுப்பு என்பது ஓர் உருமாற்றுத் திட்டம் என்பதாகும். இம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக நல்லதொரு சிறந்த பண்புடைய இளைஞர்களை உருவாக்க முடியும். அதன் அடிப்படையில் மலேசிய அருணகிரிநாதர் மன்றத்திற்கு நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்நாட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரும் சான்றோனாக உருவாக்கப்பட வேண்டும். அதுதான் என்னுடைய கனவு என்று துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தம் கருத்தை பதிவு செய்தார்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset