நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டொழுங்கு பிரச்சினை கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தயார்: புவனேஸ்வரன்

ஈப்போ 
கட்டொழுங்கு பிரச்சினை கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கத் தயார்.

பேரா மாநில பணி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் இயக்கத்தின் தலைவர் ஜி. புவனேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முக்கிய பங்காற்றி வரும் போலீஸ் துறையினர் பணி ஓய்வு பெற்றும் சமூகப் பணியில் தங்களின் அமைப்பின் வழி  சேவையை மேற்கொண்டு வருகிறார்கள்

இந்ந அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனபோதிலும் அதன் அதிகாரப் பூர்வ  திறப்பு விழா நேற்று இரவு இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாவட் லீ முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வோடு புத்தாண்டு , கிறிஸ்துமஸ் , தீபத் திருநாளை முன்னிட்டும் விருந்தோம்பல் நிகழ்வும் சிறப்புடன் நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த மாநில போலீஸ் தலைமையகத்தில் பணிபுரிந்து வரும்  சூப்பிரிடெண்டன் ரவி முனுசாமி  குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்  முன்னதாக உரையாற்றிய இயக்கத்தின் தலைவர் புவனேஸ்வரன், 

இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் போலீஸ் துறையில்  பணியாற்றி  ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள், பேரா மாநிலத்தில் பணி ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள்  உறுப்பியம் பெற்றுள்ளனர். தற்பொழுது 247 பேர் அங்கம் வகித்து வருகிறார்கள்.

May be an image of 4 people and text

இந்த அமைப்பின் வழி சங்க உறுப்பினர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமுக நல உதவிகள் இந்திய சமுகத்தைச் சேரந்த வறுமை நிலை குடும்பங்களுக்கும்  தேவையான உதவிகள் வழங்கப்படும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கட்டொழுங்கு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளதாகவும் அதற்கு ஆலோசனை வழங்க பயிற்சி பெற்ற பணி ஒய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி  வருவதாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset