நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 20 பேருக்கு கோவிட் 19 தொற்று: சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்ளி

கோத்தபாரு:

திரெங்கானுவிலும் கிளன்தானிலும் உள்ள நிவாரண மையங்களில், டிசம்பர் 22 முதல் நேற்று வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட சோதனையில் 20 பேருக்கு கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ  சுல்கிஃப்ளி அஹ்மத் உறுதிப்படுத்தினார்.

கிளந்தனில் மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். திரங்கானுவில் 5 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இதுவரை 297 மருத்துவக் குழுக்கள், 286 சுகாதாரக் குழுக்கள், 102 மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு சேவைகள் வழங்கும் குழுக்கள், 286 சுகாதார கல்வியறிவு ஊக்குவிப்புக் குழுக்கள் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்ளி அஹ்மத்  கூறினார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset