நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2024 அனைவருக்குமே ஒரு புதிய விடியலைத் தரும்: டத்தோஸ்ரீ  எம். சரவணன்  

கோலாம்பூர்:

நமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் ஆண்டாக, இந்த 2024ஆம் ஆண்டு மலர வேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டில் அனைவரின் எண்ணங்களும் நிறைவேற இயற்கையின் ஆசியோடு மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் கூறினார்.

2024 அனைவருக்குமே ஒரு புதிய விடியலைத் தரும் என எதிர்பார்ப்போம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை இந்த வாழ்க்கை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. 

அரசியல் ரீதியாக கடந்த சில வருடங்களாகவே மாறிவரும் வானிலை போல, மாறி மாறி வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களா என்று புரியாமலே இருக்கிறது. விலைகள் குறைந்த பாடில்லை, வாழ்க்கைச் செலவினங்கள் இன்னும் சுமையாகவே இருக்கின்றன. அதற்கு ஏதாவது நல்லது நடக்குமா என்று எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க, நம் கையே நமக்குதவி.

நாம் உழைக்காமல் முன்னேற முடியாது. அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைக்க முற்பட வேண்டும். முடிவென்பது எதுவும் இல்லை. ஒரு முடிவில் இன்னொரு தொடக்கம் என்பதை நினைவில் கொள்வோம். 

எனவே வாழும் இந்த வாழ்க்கையைப் பிற உயிர்களுக்கும் பயனுள்ளதாக்கி வாழ்வோம். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என வள்ளலார் கூறியது போல் நாமும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம். 
அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

புத்தாண்டில் சில நல்ல விஷயங்களைக் கவனத்தில் கொள்வோம்...
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்...
நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் என்ற உறுதிமொழியோடு புத்தாண்டை வரவேற்போம் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் கூறியுள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset