நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் குழப்பத்தை ஏற்படுத்தும்: ஜெயக்குமார்

கோலாலம்பூர்:

மலேசியா தனது கல்வி முறையில் தகுதியான நடைமுறைகளுக்கு தயாராக இல்லை. அப்படி மாற்றினால் அது குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்று பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் கூறினார்.

பூமிபுத்ரா அல்லாத பெரும்பான்மையான மாணவர்களால் தொழில்முறை படிப்புகள் நிரப்பப்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்த  தகுதிக்கான திடீர் மாற்றம் அரசியல், சமூக அமைதியின்மையை அதிகரிக்கக்கூடும்.

எந்தவொரு அமைப்பும் அனைவருக்கும் நியாயமாக இருக்க வேண்டும். இது அரசியல் ரீதியாக சாத்தியமானதோ ஏற்றுக்கொள்ளக்கூடியதோ அல்ல. 

திடீரென்று மாற்றும்பொழுது அது மகிழ்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

குறைந்த பொருளாதார பின்னணியில் உள்ள மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இழந்துள்ள தற்போதைய கோட்டா முறை ஒரு காரணம். குறிப்பாக அந்த முறை மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான முன்மொழிவுகள் வர வேண்டும் என அவர்கள் விரும்புவது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset