நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்ஹாம் கட்டடத்தை 18 மாதங்களுக்கு தன் வசம் எம்ஏசிசி வைத்திருக்கலாம்

கோலாலம்பூர்:

இல்ஹாம் கட்டடத்தை எம்ஏசிசி 18 மாதங்களுக்கு கைப்பற்றலாம் என்று வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மோயின் கூறினார்.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 274 மீட்டர் உயரமான இல்ஹாம் கட்டடத்தை எம்ஏசிசி கைப்பற்றி உள்ளது.

இந்த கட்டடத்தை கைப்பற்ற சட்டத்தின் மூலம் எம்ஏசிசி அதிகாரம் பெற்றுள்ளது.

எந்தவொரு தண்டனைச் சட்டத்தின் கீழும் யாரும் குற்றம் சாட்டப்படாவிட்டாலும், சொத்து பறிமுதல் செய்ய எம்ஏசிசி சட்டத்தின் 41ஆவது பிரிவின் கீழ் வழக்கறிஞர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியிடம் விண்ணப்பிக்கலாம்.

சொத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதைக் காட்ட, சொத்தில் ஆர்வமுள்ள மூன்றாம் தரப்பினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கும் ஆணையை நீதிபதி வெளியிடுவார்.

சட்டத்தின் கீழ் விசாரணை நிலுவையில் உள்ள அசையும் அசையா சொத்துகளை விசாரணை நிறுவனம் எவ்வளவு காலம் முடக்க முடியும் என்று அவர் கூறினார்.

குறைந்த பட்சம் 18 மாதங்கள் வரை MACC எந்த சொத்தையும் தன் வசம் வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset