நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுல்தானின் நினைவூட்டலை முழுமையாக ஆதரிக்கிறேன்: பிரதமர்

ஷாஆலம்:

மலேசியாவில் இஸ்லாமிய சமய விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் மக்கள், குறிப்பாக முஸ்லிமல்லாதவர்கள் மதிக்க வேண்டும், தலையிடக் கூடாது.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸ் ஷா இதனை நினைவூட்டி உள்ளார்.

இந்த  நினைவூட்டலை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஏதேனும் சந்தேகம், குழப்பத்தைத் தவிர்க்க முஸ்லிம் அல்லாதவர்கள், தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்திற்கு கடிதம் எழுதலாம்.

இணக்கமான, நாகரிகமான சூழ்நிலையில் எந்தக் குழப்பமும் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.

தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவரான சிலாங்கூர் சுல்தான், முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றுவதற்கு வாரியம் நம்பிக்கையையும் பொறுப்பையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

சுல்தானின் கூற்றுப்படி, வாரியம் பல்வேறு துறைகளில், குறிப்பாக சட்டம், இஸ்லாமிய மதம் சம்பந்தப்பட்ட ஆற்றல்மிக்க நிபுணர்களைக் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் அரசியல் மக்கள், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய சமய விவகாரங்களில் தொடர்ந்து தலையிட மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset