நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகவரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான அந்நிய தொழிலாளர்கள் சாலையில் கூட்டமாக நடந்து சென்றனர்

கோத்தா திங்கி:

முகவரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான அந்நிய தொழிலாளர்கள் சாலையில் கூட்டமாக நடந்து சென்றனர்.

இதனால் கோத்தா திங்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்நிய நாட்டினர் சாலையில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்ற வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

மொத்தம் 171 வங்காளதேச தொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 19 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

வேலை வாங்கி தருவதாக போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட அத்தொழிலாளர்கள் அதிருப்தியின் காரணமாக சாலையில் நடந்து வந்தனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை கோத்தா திங்கி போலீஸ் தலைவர் ஹுசைன் ஷமோரா உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset