நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெலிங் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: டாக்டர் சத்தியபிரகாஷ்

உலுசிலாங்கூர்:

பிரதமரின் கெலிங் விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று கெஅடிலான் தேசிய துணைச் செயலாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கெலிங் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

வரலாற்று புத்தகத்தை அடிப்படையாக கொண்டே தாம் இந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

இந்த வார்த்தை ஒரு இனத்தை புண்படுத்தியதால் அதற்கு பிரதமர் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டார்.

இருந்தாலும் ஒரு சில தரப்பினர் இவ்விவகாரத்தை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

குறிப்பாக பிரதமரை ஓர் இனவாதம் பிடித்தவர் போல் சித்தரிக்கின்றனர்.

உண்மையில் மக்களால் மதிக்கப்படும் அனுபவமிக்க தலைவராக அன்வார் தனது 20 வருட காலப்பகுதியில் எந்த இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக உணர்ச்சிகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை.

இந்த சூழலில், அவர் உண்மையில் ஹிகாயத் ஹாங் துவாவின் வரலாற்றிலிருந்து அந்த வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய சமூகத்தை சிறுமைப்படுத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ அவர் திட்டமிடவில்லை.

இதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இப்பிரச்சினையை பெரிதாக்க முயலும் சில தரப்பினருக்கு அவர்களின் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு டாக்டர் சத்தியபிரகாஷ் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset