நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த கால வரலாறு தெரியாதவர்கள் தலைவர்கள் ஆக முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்

பாங்கி:

இனத்தின், சமுதாயத்தின் கடந்த கால வரலாறு தெரியாதவர்கள் தலைவர்கள் ஆக முடியாது. 

அவர்களால், நிகழ் காலத்தை புரிந்து கொண்டு எதிர்காலத்தை வடிவமைக்க இயலாது. 

தமிழர் வரலாற்று பெருமைகள் தெரியாதவர்கள் எல்லாம் இன்று தலைவர்கள் ஆகிவிட்டது வேதனைக்குரியது.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாடினார் பாரதி.

வேறு எந்த இனத்திற்கும், மொழிக்கும் இல்லாத பெருமை தமிழருக்கு உண்டு. 

மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். 

பாரதியை கவிஞராக பார்த்த நாம், அவரை தலைவராக பார்க்க தவறினோம். 

அய்யன்  திருவள்ளுவரை தெய்வப் புலவராக பார்த்த நாம், அவரை தலைவராக பார்க்கவில்லை.

மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில், 

தென்கிழக்காசியாவில் சோழப் பேரரசு ஆயிரம் ஆண்டு வரலாற்று விழா நிகழ்ச்சியை இன்று மாலை நிறைவு செய்து வைத்ததில் அகம் மகிழ்கின்றேன்.

இவ்விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தும் திருமாளவன் தலைமையிலான குழுவினருக்கு எனது பாராட்டுகள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இல்லை. இளைஞர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லை என பல குற்றச்சாட்டுகள் எழுகிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள இதுபோன்ற தமிழ் விழாக்கள் அவசியம் என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset