நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்து பிறந்த நாளில் சமத்துவம் - சகோதரத்துவம் பேணுவோம்: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

கிறிஸ்துமஸ் பெருநாளை கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இயேசுபிரான் தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கினார். 

உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறரிடத்திலும் அன்பு கூருவாயாக என்றும், மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்றும் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் இக் காலத்துக்கும் பொருந்தும்.

அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் அருளியிருக்கும் இயேசுபிரானின் போதனைகளானது, ஒருவரை பண்பட்டவராக மேம்படுத்துவதோடு அதன் அடிப்படையில் அமைதியும் சுபிட்சமும் இல்லம் தொடங்கி உலகம் முழுவதும் தழைத்தோங்க வித்திடுகிறது.

இக்கால அரசியல் சூழ்நிலைகளும் மக்களிடையே ஊடுருவுகின்ற தவறான கருத்துகளும் பொது அமைதிக்கு ஊருவிளைக்கக்கூடாது. 

மதங்கள் வேறுபட்டிருந்தாலும் நல்லோரின் போதனைகளை - நற்சிந்தனைகளை ஏற்று பண்பட்டவர்களாகவும்  நல் நெறிகளை பின்பற்றுபவர்களாகவும் நாம் மேன்மையுற்றால், பொது அமைதியும் சுபிட்சமும் எங்கும் வியாபித்திருக்கும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லினத்தவர்களின் ஒற்றுமையே நம் நாட்டின் முதன்மை அடையாளம்.

இந்த பாரம்பரியம் தொடர்ந்து வலிமைப்பெற, சமத்துவம் காண்போம்; சகோதரத்துவம் பேணுவோம் என்று டத்தோ ரமணன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset