நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பேராக் தேர்தல் களம்: விக்னேஸ்வரனும் சரவணனும் வெல்வர்களா?

ஈப்போ:

பேராவில் எதிர்வரும் 2ஆம் தேதி 24 நாடாளுமன்றம்,59 சட்டமன்றத்திற்கான வேட்பாளர்கள் அறிவிப்பு வரும் என்று தேசிய முன்னணி வட்டராம் தெரிவித்துள்ளது.

பேரா மந்திரி பெசாரும்,தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முஹம்மது அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பினை செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் மஇகாவுக்கு தாப்பா, சுங்கை சிப்புட், தெலுக் இந்தான் நாடாளுமன்றங்களும், புந்தோங், சுங்கை ஆகிய சட்டமன்றங்கள் உறுதியாகியிருக்கும் வேளையில், மூன்றாவது சட்டமன்றமாக துரோனோ, அவுலோங் இவற்றில் இரண்டில் ஒன்று மஇகாவுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

சட்டமன்றத்தை பொறுத்தவரை புந்தோங்கில் பேரா ம இ கா துணைத்தலைவர் எஸ்.ஜெயகோபி, சுங்கையில் மாநிலத் தலைவர் டத்தோ இளங்கோ வடிவேலு என உறுதியாகியிருக்கும் வேளையில் மூன்றாவது சட்டமன்றம் உறுதியானவுடன் பொதுச்செயலர் சண்முகவேலுவுக்கு அது வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புந்தோங்கை பொறுத்தவரை தேசிய முன்னணி, ஹராப்பான் ஆகிய இரண்டு கட்சிகளும் 50/50 சம பலத்தில் உள்ளது.

இதுபோக இங்கு மேலும் இருவர் வாரிசான் கட்சியை பிரதிநிதித்துகிறார்கள். மேலும் மூவர் சுயேட்சையகவும் போட்டியிடக்கூடுமென தெரிகிறது. புந்தோங்கில் 5லிருந்து 7 முனைப்போட்டி இருக்கும் என கள நிலவரம் உண்டு.

சுங்கையை பொறுத்தவரை 2008லிருந்து 2018வரை 3 தவணைகளாக டிஏபியை சேர்ந்த அ.சிவநேசன் வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறையும் அங்கு ம இகாவைச் சேர்ந்த டத்தோ இளங்கோ நிறுத்தப்படும் சூழலில் வெற்றி வாய்ப்பு இரு கட்சியினருக்கும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுங்கை சிப்புட்: தான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

பாரம்பரியமான ம இ. கா தொகுதி என்ற வரலாறு சுங்கை சிப்புட் தொகுதிக்கு உண்டு. தொகுதி மக்களுக்கு துன் சாமிவேலு காலத்தில் பல முன்னேற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

ஆனால், இடையில் நிலைமை மாறியது.

மலேசிய வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சாமிவேலு அங்கு தோற்கடிக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த வரலாற்றை திருப்பி எழுத தற்போதைய தலைவர் பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

ஆம். இந்த முறை ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவரை தொகுதி பக்கம் மக்களால் அதிகம் காண முடிகிறது. உதவி தேவைப்படுபவர்களுக்கு இனம், மதம் என்று பாராமல் உதவி செய்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லாத போதும் அவர் களத்தில் நிற்பதால் அவர் மீது மக்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் உள்ளது. 

மஇகாவுக்கு 65 விழுக்காடு வெற்றி வாய்ப்பு இருப்பினும் கெஅடிலான் நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து நிலைமை மாற வாய்ப்பு உள்ளது. தற்போது ம இ காவுக்கு சாதகமாகவே உள்ளது.

தாப்பா: டத்தோஸ்ரீ எம்.சரவணன்

தாப்பாவை பொறுத்தவரை மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ எம்.சரவணன் இங்கு போட்டியிடுகின்றார். அமைச்சரான போதும் அமைச்சராக இல்லாதபோதும் அவர் தொகுதிக்கு தவறாமல் செல்பவர் என்ற நல்ல பெயரை அங்கு சம்பாதித்துள்ளார். 

மேலும், தொகுதி மக்களுக்கு அவர் நிறைய உதவிகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளார் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது.

குறிப்பாக பி40 குடும்பத்தினருக்கும் பழங்குடி மக்களுக்கும் தொடர்ந்து அவர் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். 

தொகுதி மக்களை அவர் அணுஅணுவாக அளந்து வைத்திருக்கிறார். அமைச்சராக இருந்தாலும் எளிதில் அணுகக்கூடிய அளவில் இருப்பது அவரது சிறப்பு.

கடந்த முறை சில நூறு ஒட்டு வித்தியாசத்தில்தான் அவர் வென்றார். இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்து வருகிறார். 

இருப்பினும் இரு நாட்களுக்கு முன் டத்தோஸ்ரீ அன்வார் இப்றாஹிம் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

அங்கு ஹராப்பான் வேட்பாளராக சரஸ்வதி கந்தசாமி போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் தொகுதி மக்களால் நன்கு அறியப்படும் ஒரு முகம் ஆகும்.

தெலுக் இந்தானை பொறுத்தவரை ஜசெகவுக்கு 60 விழுக்காடும், மஇகாவுக்கு 40 விழுக்காடும் வெற்றி இருக்கிறது.

பேரா ஜசெக தலைவர் nga koo ming களமிறங்கும் வேளையில் தி.முருகையா மஇகா வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-  பேராக் புகழேந்தி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset