நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

6 மாதங்களில் 5.4 சதவீதம் குறைந்தது ரூபாயின் மதிப்பு

புது டெல்லி: 

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.4 சதவீதம் சரிந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்தை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது. வரும் மாதங்களில் உணவுப் பொருள்களின் சில்லறை பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் உலக அளவில் எரிவாயு, கச்சா எண்ணெய் விலை, அவற்றின் விநியோகம் ஆகியவை கவலைக்குரியதாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.2 சதவீதமாக இருந்தது. இது 8 சதவீத உலக பணவீக்கத்தைவிட குறைவு. 

இதே காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.4 சதவீதம் சரிந்துள்ளது. 

டாலருக்கு நிகரான அந்த நாடுகளின் செலாவணி மதிப்பு 6 மாதங்களில் 8.9 சதவீதம் சரிந்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

+ - reset