நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்) - உத்தம நபி உதய தின சிந்தனைகள் 

நபிகளார் ஒரு போராளியாக இருந்தார். ஒரு தலைவராக இருந்தார்.

ஒரு அரசராக இருந்தார். ஒரு நல்ல தகப்பனாக இருந்தார். நல்ல கணவனாக இருந்தார்.

ஒரு நல்ல ஆசிரியராக இருந்தார்.

ஒரு நல்ல ஜனநாயகவாதியாக இருந்தார். சமூக நீதியின் காவலராக இருந்தார்.

ஒருமைப்பாட்டின் உறைவிடமாக இருந்தார். இலக்கணத்தை எழுதி வைத்தது மட்டுமல்ல, அந்த இலக்கணமாகவே வாழும் வாய்ப்பை இறைவன் அவருக்கு நிறையவே தந்திருந்தான்.

அவருடைய வாழ்க்கையை எத்தனை கோணங்களில் வேண்டுமானாலும் பார்க்கலாம். அவருடைய வாழ்வு முழுவதும் ஓராயிரம் செய்திகள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வளர வேண்டும் என்பது மட்டுமல்ல, எப்படி மரித்துப் போக வேண்டும் என்று கூடச் சொல்லித் தந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் .

 - பீட்டர் அல்போன்ஸ்


நபிகளார் வியக்கத்தக்க போர்த்தளபதியாகவும், அரசியல் வல்லுநராகவும், பைசாந்திரிய பாரசீகப் பேரரசுகளுக்கு இணையாக அவற்றை வெல்லக் கூடியதுமான  ஒரு கூட்டு அரசமைப்பை உருவாக்கக் கூடியவராகவும் திகழ்ந்தார்.

 நபிகளார் வியக்கத்தக்க போர் தந்திரியாகவும், அரசியல் ராஜதந்திரம் மிக்கவராகவும் இருந்திருக்கின்றார்கள். மிகவும் நேர்மையுடனும், எல்லாருக்கும் சரிசமமான ஓர் அரசியல் அமைப்பையும், நீதி நெறிமுறைகளையும் கொண்டிருந்தார். 

 - பேராசிரியர் அ. மார்க்ஸ்

எச்சூழலிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் மனிதர்கள் மிகுந்த இந்த உலகில் தம்முடைய உருவப் படத்தையோ,  சிலையையோ மக்களுக்கு அடையாளமாக உயர்த்திப் பிடிக்க விரும்பாத மாமனிதர் நபிகளார். 

உருவ வழிபாட்டை மறுத்து தனிமனித ஆணவத்தை தகர்த்தெறிந்து இருக்கின்றார்.

 எனவே தான் நபிகள் நாயகம் ஜனநாயகத்தின் சின்னமாக மானுடத்தின் அற்புதமாக விளங்குகிறார்.

- தொல்.திருமாவளவன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset