நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமானங்களில் இனி முகக்கவரி அணிவது கட்டாயமில்லை: கைரி 

கோலாலம்பூர்: 

மலேசிய விமானங்களில் இனி முகக்கவரி அணிவது கட்டாயமில்லை  என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் காய்ச்சல், இருமல், போன்ற கோவிட் 19 தொடர்பான 
அறிகுறிகளைக் கொண்டவர்கள்  முகக்கவரி அணிய பரிந்துரைக்கப்படுகின்றனர் என்றார் அவர். 

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது முதியவர்கள் போன்றவர்களுடன் பயணம் செய்தால் விமானங்களில் முகக்கவரி அணிய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பெரும்பாலான உள்அரங்கில் முகக்கவசம் இனி கட்டாயமில்லை என்று அமைச்சர் அறிவித்தார். இருப்பினும் வளாகத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அணிய வேண்டுமா என்பதை தீர்மானிக்க இன்னும் உரிமை உண்டு.

விமானங்களில் உயர் திறன் கொண்ட துகள் உறிஞ்சும் (HEPA) வடிகட்டிகள் நிறுவப்பட்டதாகவும், இப்போது அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுவதாகவும் கைரி கூறினார். 

தற்போது பொது சுகாதார அமைப்பில் கோவிட்-19 தொற்றுகளின் அளவு குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த தளர்வு ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகியவற்றின் சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப அமையும் என்றார் கைரி. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset